Home Featured தமிழ் நாடு வாக்குச்சாவடி அருகே மயங்கி விழுந்த காவலர் – முதல் உதவி செய்த தமிழிசை!

வாக்குச்சாவடி அருகே மயங்கி விழுந்த காவலர் – முதல் உதவி செய்த தமிழிசை!

715
0
SHARE
Ad

tamilisaitreatment60021சென்னை – வாக்குச்சாவடி அருகே மயங்கி விழுந்த போலீஸ்காரருக்கு முதல் உதவி செய்துள்ளார், தமிழக பாஜக தலைவரும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன்.

தமிழிசை சவுந்தராஜன் நேற்று காலை வாக்களிக்க சாலிகிராமம் பாலலோக் வாக்கு மையத்திற்கு சென்றார். அப்போது, அங்கு, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நடுத்தர வயது போலீஸ்காரர் ஒருவர் பணி சேர்வால் மயங்கி சாய்ந்தார்.

tamilisaitreatment60011உடனடியாக அங்கு ஓடிச் சென்ற தமிழிசை, போலீஸ்காரரின் நாடித்துடிப்பை பரிசோதித்து, முதலுதவி அளித்தார். இதையடுத்து, அந்த போலீஸ்காரரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தமிழிசை சவுந்திரராஜன், எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice