Home Featured நாடு ‘அன்வாரின் கடிதம்’ தொடர்பில் மௌனம் காக்கும் வான் அசிசா!

‘அன்வாரின் கடிதம்’ தொடர்பில் மௌனம் காக்கும் வான் அசிசா!

602
0
SHARE
Ad

Wan-Azizahகோலாலம்பூர் – மக்கள் பிரகடனம் பற்றிய அன்வாரின் 8 பக்கக் கடிதம் குறித்து அவரது மனைவியும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசிசா மௌனம் காத்து வருகின்றார்.

இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள் அவரைச் சந்தித்த போது, அக்கடிதம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் படி கேட்டுள்ளனர்.

அதற்கு, “அது உள்கட்சி விவகாரம்” என்று வான் அசிசா பதிலளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மக்கள் பிரகடனம் குறைபாடு கொண்டது, சீர்திருத்த நோக்கத்தில் முறையற்றது என்று அன்வார் விமர்சித்துள்ளதோடு, மகாதீருடன் இணைந்து பணியாற்றுவதில் பிகேஆர் தலைவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.