Home Featured நாடு கினபாலு மலையில் ஏறினார் சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரா!

கினபாலு மலையில் ஏறினார் சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரா!

598
0
SHARE
Ad

Subra-Dr-Mt Kinabalu Challengeகோத்தாகினபாலு – மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தான் வகிக்கும் அமைச்சுப் பொறுப்புக்கு ஏற்ப, உடல் நலத்தைப் பேணும் முறைகள், வழிகள் குறித்து அடிக்கடி அறிக்கைகள் விடுப்பதும், ஆலோசனைகள் வழங்குவதும் வழக்கம்.

தான் வழங்கும் உடல்நல ஆலோசனைகளுக்கு ஏற்ப தானும் நடந்து காட்ட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்ட அவர் நேற்று சபாவில் உள்ள மலேசியாவிலேயே உயரமான மலையான கினபாலு மலையில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டார்.

Subra-Mount Kinabalu-climb6 கிலோமீட்டர் தூரமுள்ள மலைப்பாதையில் நடந்து சென்று, 11,000 ஆயிரம் அடி உயரத்தில், கடுமையான, சவாலான தட்ப, வெப்ப சூழ்நிலை – மழை –இவற்றுக்கிடையில் கினபாலு மலையை ஏறிய சுப்ரா, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்திலும், சமூக வலைத் தளங்களிலும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று காலை 9.30 மணியளவில் மலை ஏறத் தொடங்கிய அவர் மாலை 6.45 மணியளவில் மலை உச்சியில் தனது குழுவினருடன் இருக்கும் படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Subra-Mt Kinabalu-challenge-தனது பதிவுகளில் “ஒவ்வொரு மலை உச்சியும் அடையக் கூடியதுதான், நீங்கள் சளைக்காது ஏறிக் கொண்டேயிருந்தால்” (Every mountain top is within reach if you just keep climbing) என்ற வாசகத்தையும் சுப்ரா பதிவு செய்துள்ளார்:-

கடந்த ஆண்டு, ஜூன் 5ஆம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பேரிடர் மீட்புக் குழுவினர் எதிர்நோக்கிய சவால்கள் மீண்டும் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளும் வண்ணம், ஒரு பயிற்சியாக கினபாலு மலையேறும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது என்றும் சுப்ரா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சியில் சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அரசாங்க இலாகாக்கள் ஒருங்கிணைந்து ஈடுபட்டன.

Subra-Mohan VS-Mt Kinabalu challenge

நேற்று நடைபெற்ற கினபாலு மலையேறும் பயிற்சியில் மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகனும் பங்கு பெற்றார்…