Home Featured தமிழ் நாடு மே 19 வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரும் வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

மே 19 வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரும் வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

487
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சென்னை – மே 16ஆம் தேதி நடைபெற்ற தமிழகத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று 19ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் நிலையில், தமிழகத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து இன்று காலை 8.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை எந்தவித தடையும் இன்றி தொடர்ந்து நடைபெறும் என்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூரில் 3 கொள்கலன் லாரிகளில் 570 கோடி ரூபாய் பிடிபட்டதன் காரணமாக அந்த விவகாரத்தில் தெளிவான முடிவு தெரியும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என ஒரு வழக்கும் –

#TamilSchoolmychoice

தஞ்சை. அரவக் குறிச்சி தொகுதிகளில் மறுதேர்தல் நடத்தப்படுவதால், அந்தத் தேர்தல்களில் வாக்குப் பதிவுகள் முடிவடைந்த பின்னரே, மே 16இல் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கான  வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட வேண்டும் எனவும் –

சென்னை உயர்நீதமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.