Home Featured வணிகம் இன்று முதல் சிஐஎம்பி தலைவராக மீண்டும் நசிர் ரசாக்!

இன்று முதல் சிஐஎம்பி தலைவராக மீண்டும் நசிர் ரசாக்!

787
0
SHARE
Ad

Datuk-Seri-Nazir-Razak1-565x398கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்பின் இளைய சகோதரருமான டத்தோஸ்ரீ நசிர் ரசாக் இன்று முதல் மீண்டும் சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்குவார்.

தனது சகோதரருக்காக 7 மில்லியன் அமெரிக்க டாலரை தேர்தல் சமயத்தில் விநியோகித்த காரணத்திற்காக சிஐஎம்பி குழுமத்தின் இயக்குநர் வாரியம் சுதந்திரமான முறையில் விசாரணை மேற்கொள்ள வழிவிடும் வகையில் நசிர் ரசாக் விடுமுறையில் சென்றிருந்தார்.

சிஐஎம்பி குழுமத்தின் இயக்குநர் வாரியம் தனது விசாரணையில் நசிர் ரசாக், முறைகேடாகவோ, சட்டத்துக்குப் புறம்பாகவோ, நடந்து கொள்ளவில்லை என முடிவெடுத்ததைத் தொடர்ந்து நசிர் மீண்டும் தனது பணிகளைத் தொடர்வார்.

#TamilSchoolmychoice

சிஐஎம்பி குழுமத்தின் தலைவராகவும், இயக்குநராகவும் அவர் தனது பணிகளைத் தொடர்வார்.