Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல் : காலை 8.00 மணி வரையிலான இறுதி நிலவரங்கள்!

தமிழகத் தேர்தல் : காலை 8.00 மணி வரையிலான இறுதி நிலவரங்கள்!

630
0
SHARE
Ad

Tamil Nadu-elections-2016

  • இன்று காலை இந்திய நேரம் 8.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கும்
  • மொத்தம் 232 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும்
  • மொத்தம் 68 வாக்களிப்பு மையங்களில் பலத்த காவலுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
  • நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அரவக் குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமிக்காக பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
  • சாதிக் பாட்சா கொலையில் ஸ்டாலினுக்கு தொடர்பு உண்டு எனவும், அதற்கான ஆதாரங்களை வைத்திருக்கின்றேன் என்றும், விரைவில் வழக்கு தொடுப்பேன் என்றும் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினரைப் பாதுகாக்கும் நோக்கில்தான் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டார் என்றும் கரூரில் வைகோ அதிரடி அறிவிப்பு
  • வைகோவின் குற்றச்சாட்டுகளை திமுக சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் உடனடியாக மறுத்துள்ளார்.
  • இன்று தமிழகத்தில் மழை பெய்யலாம் என வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கைகள் மழையால் பாதிக்கப்படாத வண்ணம் தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.
  • வைகோவின் தலைமைத்துவம் மீது அதிருப்தி கொண்டு தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் மதிமுகவிலிருந்து வெளியேறியுள்ளார்.