Home Featured தொழில் நுட்பம் தமிழகத் தேர்தல் முடிவுகள் – உடனுக்குடன் செல்லியல் இணைய மற்றும் குறுஞ்செயலி தளங்களில்!

தமிழகத் தேர்தல் முடிவுகள் – உடனுக்குடன் செல்லியல் இணைய மற்றும் குறுஞ்செயலி தளங்களில்!

637
0
SHARE
Ad

Selliyal Logo 440 x 215கோலாலம்பூர் – இன்று வெளியாகும் தமிழகத் தேர்தல் முடிவுகள் செல்லியலின் பலதரப்பட்ட தொழில்நுட்பத் தளங்களில் உடனுக்குடன் வெளியிடப்படும்.

தேர்தல் முடிவுகளை செல்லியல் இணையப் பக்கத்தில் selliyal.com என்ற இணைப்பின் வழி வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்.

அந்த முடிவுகள் ஒரே நேரத்தில் செல்லியல் குறுஞ்செயலியிலும் (Mobile App), செல்லியல் முகநூல் (பேஸ்புக்) பக்கத்திலும், மற்றும் டுவிட்டர் பக்கத்திலும் இடம் பெறும்.

#TamilSchoolmychoice

செல்லியல் செய்திகள் மொபைல் எப் எனப்படும் குறுஞ்செயலி தளத்திலும் வெளியிடப்படுவதால், வாசகர்கள் தங்களின் கைத்தொலைபேசிகளின் வழி இந்த குறுஞ்செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஐபோன் போன்ற ஆப்பிள் கருவிகள் வைத்திருப்பவர்கள் எப்ஸ் ஸ்டோர் (Apps Store) என்ற தளத்திலிருந்தும், அண்ட்ரோய்ட் வகை கைத்தொலைபேசிகள் வைத்திருப்பவர்கள் பிளே ஸ்டோர் (Play Store) எனப்படும் தளத்திலிருந்தும் செல்லியலைப் பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.

selliyal_middle_adஅவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தால், செல்லியலின் துல்லியமான இறுதி நேர முடிவுகள் உடனுக்குடன் உங்களின் கைத்தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்திகளாக, எஸ்.எம்.எஸ்  வடிவம் போன்று உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். முடிவுகளைத் தெரிந்து கொள்ள, நீங்களாகவே தேடிச் சென்று இணையப் பக்கங்களை துழாவிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இன்று தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில், செல்லியல் இணையத் தளத்தை உலகம் எங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரே நேரத்தில் அணுகுவார்கள் என்பதால், தொழில் நுட்பக் காரணங்களுக்காக செல்லியல் இணையத் தொடர்பு கிடைக்கவில்லை என்றால் வாசகர்கள் எங்களின் செய்திகளை முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களின் வழி தெரிந்து கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்