- தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது, துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக ஆளுநர் ரோசய்யா மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டுகள் கூறியிருந்ததைத் தொடர்ந்து, அவர் மீது ஜெயலலிதா சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு சென்னை அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- ஒத்தி வைக்கப்பட்டு, எதிர்வரும் மே 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் அரவக் குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தேர்தல்களைத் தடை செய்யவேண்டும் என்றும், அங்கு மீண்டும் புதிதாக வேட்புமனுத் தாக்கல்கள் ஏற்கப்பட்டு, மறுதேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
- இந்திய நேரப்படி காலை 8.00 மணிக்குத் தொடங்கும் வாக்களிப்பின் போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அரை மணி நேரத்துக்குள்ளாக தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும்.
- அதன் பிறகு 8.30 மணி முதல் மற்ற மின்னியல் இயந்திர வாக்குகள் எண்ணப்படும்.