மும்பை – தனது நான்கு நாள் இந்தியப் பயணத்தின் முதல் கட்டமாக மும்பைக்கு வருகை தந்திருக்கும் ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிக் குக் நேற்று புதன்கிழமை அந்நகரிலுள்ள பிரபல சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் அந்த வழிபாட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியும் கலந்து கொண்டார்.
தனது நான்கு நாள் பயணத்தின்போது டிம் குக் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானையும் சந்திக்கவுள்ளார்.
சீனாவில் தனது வருகையை முடித்துக் கொண்டு அங்கிருந்து, ஒரு தனி விமானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு டிம் குக் மும்பை வந்தடைந்தார்.
பெங்களூர் செல்வதும் டிம் குக் பயணத்தில் ஒரு பகுதியாகும். அங்கு ஆப்பிள் நிறுவனத்தின் புதிய குறுஞ்செயலி (மொபைல் எப்ஸ்) வடிவமைப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
டிம் குக் இந்தியாவின் முன்னணி குறுஞ்செயலி (மொபைல் எப்ஸ்) வடிவமைப்பாளர்களைச் சந்தித்து அளவளாவியபோது…(நன்றி: டிம் குக் டுவிட்டர் பக்கம்)