Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல் முடிவுகள்: 68 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தமிழகத் தேர்தல் முடிவுகள்: 68 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

498
0
SHARE
Ad

tamil-nadu-voting-pti

  • 2016 தமிழக சட்டமன்றத்தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை இந்திய நேரப்படி காலை 8 மணிக்குத் தொடங்கியது.
  • தற்போது தொகுதி வாரியாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
  • மாவட்டம் எங்கிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
  • மின்னணு இயந்திரங்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
  • வாக்கு எண்ணிக்கைப் பணியில் 9,621 பேர் ஈடுபடவுள்ளனர். 3,971 நுண்பார்வையாளர்களும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடவுள்ளனர். ஆக மொத்தம் 13, 592 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
  • பிற்பகல் 12 மணியளவில் முன்னிலை வகிக்கும் கட்சி எதுவென்று தெரியவரலாம்.