கொழும்பு – இலங்கையில் ரோனு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 டன் நிவாரண பொருட்களுடன் இரண்டு கப்பல்கள் மற்றும் விமானங்களை இந்தியா அனுப்பியுள்ளது.
வங்க கடலில் ஏற்பட்ட ரோணு புயல் காரணமாக இலங்கையில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இது வரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 130-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா இரண்டு கப்பல்களில் சுமார் 40 டன் நிவாரண பொருட்களை அனுப்பியது.
அதுமுட்டுமின்றி இந்திய விமானபடைக்கு சொந்தமான விமானத்தின் மூலமாக ஏராளமான மருந்து பொருட்களையும் இந்தியா அனுப்பியுள்ளது.
கொச்சி துறைமுகத்தில் இருந்து ஐ.என்.எஸ் சட்லஜ் கப்பல் மூலமாக ஏற்கனவே ஒரு பகுதி நிவாரண பொருட்கள் கொழும்பு சென்றடைந்த நிலையில் மற்றொரு கப்பலான சுனாய்னா இன்று கொச்சி துறைமுகத்தில் இருந்து இலங்கை புறப்பட்டது.
ஆபத்து காலத்தில் உதவும் வகையில் இந்த கப்பல்கள் சில நாட்கள் இலங்கையில் இருந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் என்பது குறிப்பிடதக்கது.