Home Featured உலகம் இலங்கையில் வெள்ளம்-நிலச்சரிவால் 73 பேர் பலி! 130 பேர் காணவில்லை!

இலங்கையில் வெள்ளம்-நிலச்சரிவால் 73 பேர் பலி! 130 பேர் காணவில்லை!

468
0
SHARE
Ad

TOPSHOTS Sri Lankan residents wade through floodwaters in Welipanna on June 2, 2014. Mudslides cause by heavy monsoon rains in the west and south of the island have killed at least 13 people and left two more missing.   AFP PHOTO / Ishara S. KODIKARA

கொழும்பு – இலங்கையில் நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் 73 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்தனர். சுமார் 130 பேரை இன்னமும் காணவில்லை.

நூற்றுக்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பேரிடர் நிர்வாக நிலையம் அந்தத் தகவலை வெளியிட்டது.

#TamilSchoolmychoice

maxresdefault-570x292இலங்கையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளில் ஒன்றிணைந்து கைகொடுக்குமாறு காமன்வெல்த் உறுப்பு நாடுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலாளர் பெட்ரிஷா ஸ்காட்லண்ட் அந்த வேண்டுகோளை விடுத்தார். பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.

srilanka_5இலங்கைக்குக் கைகொடுக்க இந்தியா முன்வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கும் அந்நாட்டு மக்களுக்கும் உதவ இந்தியா உறுதியாக இருப்பதாய் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்த இக்கட்டான நிலையில் இலங்கைக்குத் தேவையான எவ்வித உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாய் ஆஸ்திரேலியா உறுதிகூறியுள்ளது.

srilanka_flood_mishap_இலங்கை ஆஸ்திரேலியாவின் நட்பு நாடு என்றும், அதற்குக் கைகொடுப்பதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லை என்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் வாட்டி ஜூலி பிஷப் சொன்னார்.

சில நாட்களுக்குமுன் இலங்கையை ரொனு சூறாவளி தாக்கியதில் அங்கு கடும் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.