Home Featured தமிழ் நாடு மூளையில் ரத்தக் கசிவு: அதிமுக எம்எல்ஏ சீனி வேல் கவலைக்கிடம்! அதிமுக மேலிடம் அதிர்ச்சி!

மூளையில் ரத்தக் கசிவு: அதிமுக எம்எல்ஏ சீனி வேல் கவலைக்கிடம்! அதிமுக மேலிடம் அதிர்ச்சி!

836
0
SHARE
Ad

mla_2862752fமதுரை  – நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம், திருபரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.எம்.சீனிவேல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவர் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் இரவு (18.05.2016) நெஞ்சுவலி காரணமாக மதுரை சொக்கிக்குளம் பகுதியில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலைமை மோசமாக உள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் மற்றொரு தனியார் மருத்துவமனையான கண்ணா ஜோசப்பில் அனுமதித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். இதனால் அதிமுக மேலிடம் அதிர்ச்சியில் உள்ளது.