Home Featured தமிழ் நாடு தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்கள் மே 23ஆம் தேதியே நடைபெறவேண்டும் – திமுக வழக்கை இன்று பிற்பகல்...

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்கள் மே 23ஆம் தேதியே நடைபெறவேண்டும் – திமுக வழக்கை இன்று பிற்பகல் விசாரிக்கின்றது நீதிமன்றம்!

838
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சென்னை – தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்களை ஜூன் 13ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளதைத் தொடர்ந்து அந்த முடிவை எதிர்த்து, திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி இன்று பிற்பகலிலேயே  இதனை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இரண்டு தேர்தல்களையும், மே 23ஆம் தேதியே முன்பு திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என திமுக நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு தேர்தல்கள் மே 23இல் நடைபெறுமா அல்லது ஜூன் 13ஆம் தேதிதான் நடைபெறுமா என்பது இன்று பிற்பகலில் தெரிந்து விடும் என்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice