Home Featured தமிழ் நாடு அரவக்குறிச்சி: அதிமுக 23,673 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

அரவக்குறிச்சி: அதிமுக 23,673 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

840
0
SHARE
Ad

senthil-balaji-arava-kurichi-assemblyman

சென்னை – மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற தமிழகத்தின் 3 சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி 88,068 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் கே.சி.பழனிசாமி 64,395 வாக்குகள் பெற்றார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து 23,673 வாக்குகள் பெரும்பான்மையில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியிலும் மூன்றாவது இடத்தை பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது. 1,179 வாக்குகள் பாஜக பெற்ற வேளையில், நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்ட விஜயகாந்தின் தேமுதிக 1,070 வாக்குகள் பெற்றது.