Home Featured தமிழ் நாடு திருப்பரங்குன்றம்: அதிமுக 42,620 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

திருப்பரங்குன்றம்: அதிமுக 42,620 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

718
0
SHARE
Ad

ak-bose-thiruparankundram

மதுரை – திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் (படம்) வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, வெற்றிச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு 113,032 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் சரவணன் 70,362  வாக்குகள் பெற்றார். இதனைத் தொடர்ந்து 42,620 வாக்குகள் வித்தியாசத்தில் போஸ் வெற்றி பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice

6,559 வாக்குகள் பெற்று  மூன்றாவது இடத்தை பாஜக பிடித்துள்ளது. 4,105 வாக்குகள் பெற்று தேமுதிக நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.