Home Featured நாடு ‘பெர்சே 7’ இயக்கத்தைத் தொடங்குகிறார் ஜமால்!

‘பெர்சே 7’ இயக்கத்தைத் தொடங்குகிறார் ஜமால்!

631
0
SHARE
Ad

Dato Jamal Yunusகோலாலம்பூர் – தடுப்புக் காவலில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் விடுதலையான சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுஸ், புதிய அறிவிப்பை ஒன்றை விடுத்துள்ளார்.

பிகேஆர் தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து சிலாங்கூரைப் பாதுகாக்க, ‘பெர்சே 7’ என்ற இயக்கத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

நாளை புதன்கிழமை மதியம் 3 மணியளவில், ஷா ஆலமிலுள்ள சிலாங்கூர் செயற்குழு கட்டிடத்தில் அவ்வியக்கம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜமால் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“சிலாங்கூரில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் அவ்வியக்கம் மூலமாக நிகழ்ச்சிகள் (Roadshow) படைக்கவுள்ளோம். எங்கள் மாநிலத்தைப் பாதுகாப்பதில் மிகவும் பிடிவாதமாக உள்ளோம்” என்று அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் ஜமால் கூறியுள்ளார்.