Home Featured தமிழ் நாடு திருப்பரங்குன்றத்தில் போட்டியிட விஜயகாந்துக்கு தொண்டர்கள் கோரிக்கை!

திருப்பரங்குன்றத்தில் போட்டியிட விஜயகாந்துக்கு தொண்டர்கள் கோரிக்கை!

929
0
SHARE
Ad

vijayakanthசென்னை – வரும் நவம்பர் 19-ம் தேதி, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக-வை எதிர்த்து தேமுதிக சார்பில் கட்சித் தலைவர் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என்று தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர் பேட்டைத் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் கடும் தோல்வியுற்றார். இது அவரது தொண்டர்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்றால், அது தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்று தொண்டர்கள் விரும்புவதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதோடு, திருப்பரங்குன்றம் விஜயகாந்தின் சொந்த மண் என்பதால், அவர் அங்கு போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று தொண்டர்கள் நம்புவதாகவும் தேமுதிக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.