லண்டன் – நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் சிட்டி விமான நிலையத்தில் ஏற்பட்ட இரசாயனத் தாக்கம் காரணமாக உடனடியாக அங்கிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் இணைந்து தேவையான உபகரணங்களுடன் அங்கு தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்ட பிறகு, விமான நிலையம் பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த இரசாயனத் தாக்கத்தால் பயணிகளில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. பயணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த சுமார் 26 அவசர ஊர்திகள் பயன்படுத்ததப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சிஎஸ் வாயு கசிவு அங்கு எப்படி ஏற்பட்டது? என்றும், தீவிரவாதச் செயல் காரணமாக இருக்குமா? என்றும், பயணிகளில் யாராவது அந்த வாயுவை கசிய விட்டனரா? என்றும் காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.