தஞ்சாவூர் – (இறுதி நிலவர கூடுதல் தகவல்களுடன்) அதிமுக வேட்பாளர் ரங்கசாமி (படம்) தஞ்சாவூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றுள்ளார். அவர் இரண்டாவது முறையாக இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்கான அதிகாரத்துவ நியமன கடிதத்தை தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னர் தேர்தல் அதிகாரி வழங்கினார்.
வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக நிறைவடைந்தபோது, ரங்கசாமிக்கு 101,33 வாக்குகள் கிடைத்தன.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் அஞ்சுகம் பூபதி 74,487 வாக்குகள் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ரங்கசாமி 26,846 வாக்குகள் வித்தியாசத்தில் தஞ்சையில் வெற்றி பெற்றுள்ளார்.
மற்ற முக்கிய கட்சிகள் போட்டியிடவில்லை என்ற காரணத்தால் பாஜக 3,806 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை தஞ்சாவூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிடித்துள்ளது.
தஞ்சையில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு வெறும் 1,536 வாக்குகள் மட்டுமே கிடைத்து, அந்தக் கட்சி படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.