இதற்கு முன்பாக இந்த இரண்டு இடைத் தேர்தல்களும் எதிர்வரும் ஜூன் 13ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த இரண்டு தேர்தல்களையும் விரைவாக நடத்த வேண்டுமென தமிழக ஆளுநர் ரோசய்யா தமிழகத் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
தேர்தல்களை ஒத்தி வைத்ததில், தமிழகத் தேர்தல் ஆணையம், ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும், ஆளும் அதிமுக அரசுவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், மற்ற கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதற்கிடையில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ஜனநாயக ரீதியிலும் நேர்மையான முறையிலும், நியாய வழியிலும் நடத்துவதற்கு இனியாவது தேர்தல் ஆணையம் முன் வர வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன் என திமுக தலைவர் கலைஞர்மு.கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார்.