Home Featured நாடு ஹூடுட் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவேன்! – தியோங் லாய் அறிவிப்பு!

ஹூடுட் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவேன்! – தியோங் லாய் அறிவிப்பு!

777
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பாஸ் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டிருக்கும் தனிநபர் மசோதாவான ஹூடுட் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அமைச்சரவையிலிருந்து பதவி விலகுவேன் என மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் (படம்) அதிரடியாக அறிவித்துள்ளார்.

liow-tiong-lai-aug7“இந்த மசோதாவைத் தடுத்து நிறுத்த நான் எல்லா வகைகளிலும் முயற்சி செய்து வருகின்றேன். தேசிய முன்னணியின் அனைத்து உறுப்பியக் கட்சிகளும் இணைந்து இதனைத் தடுத்த நிறுத்த ஆவன செய்து வருகின்றேன். இரு தரப்பிலும் இணக்கம் கண்டு இந்த மசோதாவைத் தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றேன். ஆனால், எனது முயற்சிகள் பலிக்காவிட்டால் நான் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன்” என லியோவ் தெரிவித்ததாக ஸ்டார் செய்தி இணையத் தளம் தெரிவித்துள்ளது.

ஹூடுட் சட்ட மசோதாவை கடுமையாக எதிர்ப்போம் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும் ஏற்கனவே அறிவித்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice