Home Featured நாடு கோலகங்சார் தே.மு வேட்பாளராக மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி தேர்வு!

கோலகங்சார் தே.மு வேட்பாளராக மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி தேர்வு!

570
0
SHARE
Ad

கோலகங்சார் – எதிர்வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக, ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் முகமட் கைரில் அனுவார் வான் முகமட்டின் துணைவியார் டத்தின் மஸ்துரா முகமட் யாசிட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Datin-Mastura-Mohd-Yazid டத்தின் மஸ்துரா முகமட் யாசிட் (படம்: நன்றி – ஃபிரி மலேசியா டுடே)

இவரைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபங்களை வாக்குகளாக மாற்றுவதற்கு தேசிய முன்னணி வியூகம் வகுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி இன்று சனிக்கிழமை இந்த அறிவிப்பைச் செய்தார்.

ஒரு வழக்கறிஞரான, 55 வயது மஸ்துரா  நான்கு பிள்ளைகளுக்கு தாயாராவார். கோலகங்சார் வட்டாரத்தைச் சேர்ந்த இவர், உள்ளூர்க்காரர் என்பதோடு, கோலகங்சார் வட்டாரத்தை நன்கு அறிந்தவர் என்பதால் தேசிய முன்னணியின் வலுவான வேட்பாளராக இவர் கருதப்படுகிறார்.

கோலகங்சார் இடைத் தேர்தலில் பாஸ் கட்சி வேட்பாளராக, பேராக் பாஸ் மகளிர் பகுதி தலைவி டாக்டர் நஜிஹாத்து சலேஹா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு மருத்துவராவார்.

எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹாராப்பான் சார்பாக அமானா நெகாரா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுபவர் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.