Home Featured இந்தியா காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகின்றார் ப.சிதம்பரம்!

காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகின்றார் ப.சிதம்பரம்!

576
0
SHARE
Ad

புதுடில்லி – விரைவில் நடைபெறவிருக்கும் இந்தியாவின் மாநிலங்களவைக்கான (ராஜ்யசபா) தேர்தல்களுக்கான வேட்பாளர்களை பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன.

ஜூன் மாதத்தில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது.

தமிழகத்தில் 6 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நிலையில் திமுக 2 வேட்பாளர்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து,

#TamilSchoolmychoice

அதிமுகவும் தனது சார்பில் 4 வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றது.

Chidambaram-sadness காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் ஒருவராவார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ப. சிதம்பரம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆஸ்கர் பெர்னாண்டஸ்,  விவேக் தன்கா, கபில் சிபல், சயா வர்மா ஆகியோரும்  போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் இருந்து கபில் சிபல்,  கர்நாடகாவில் இருந்து ஜெய்ராம் ரமேஷ்,  ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர்.