Home Featured உலகம் அமெரிக்கத் தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா மன்சூர் பலி!

அமெரிக்கத் தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா மன்சூர் பலி!

680
0
SHARE
Ad

Taliban-leader-Mullahகாபூல் – ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க படையின் ஆளில்லா விமானங்கள் தலீபான் தலைவர் முல்லா மன்சூர் மற்றும் அவரது கூட்டாளிகளை கண்காணித்து வந்தன.

இந்நிலையில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மன்சூர் மற்றும் அவனது கூட்டாளியுடன் ஒரு காரில் சென்று கொண்டிருந்தபோது ஆளில்லா விமான தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த தகவலை ஆப்கானிஸ்தானின் உளவு ஏஜென்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் இதை உறுதிப்படுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.