வங்கதேசம் – வங்கதேசத்தின் தெற்கு கடற்கரையைத் தாக்கிய ரோணு புயலுக்கு 34 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
88கிமீ வேக சூறைக்காற்றுடன் ரோணு புயல் பாரிசல்-சிட்டகாங் பகுதியில் தாக்கியது. இதனால் வங்கதேசம் முழுதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வடமேற்கு கடற்கரை நகரான சிட்டகாங்கில் சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.
இங்குதான் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டது. தென்மேற்கு போலா, வடமேற்கு நவகாளி மற்றும் கோக்ஸ் பசார் கடற்கரை மாவட்டங்களில் சுமார் 85,000 வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டிடங்கள் கடும் சேதமடைந்தன. 3 பேர் இப்பகுதிகளில் பலியாகியுள்ளனர்.
பலர் நீரில் மூழ்கியும், நிலச்சரிவுக்கும், மரங்கள் விழுந்து விழுந்ததிலும் பலியாகினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 21 லட்சம் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்ட சுமார் 5 லட்சம் பேர்களுக்கான ஏற்பாடுகளும் குறிப்பிட்ட நேரத்தில் கிடைத்ததாக பேரிடர் மேலாண்மை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
முதலில் புயல் தென்மேற்கு கடற்கரையைத் தாக்கி பிறகு தென் கிழக்கு நோக்கி நகர்ந்தது. இதனால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
சிட்டகாங் சர்வதேச விமானத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. 1970-இல் வங்கதேசத்தைத் தாக்கிய புயலுக்கு சுமார் 5 லட்சம் பேர் பலியானதும், 1991-ஈல் தாக்கிய புயலுக்கு சுமார் 1,40,000 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வானிலைய் ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் சரியான நேரத்தில் கிடைத்ததால் பலி எண்ணிக்கை இம்முறை குறைந்துள்ளது.