6-ஆவது முறையாக தமிழகத்தின் முதல் அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து 28 அமைச்சர்களும் குழுவாக பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் ரோசய்யா அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் மத்திய அரசின் சார்பில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கும் அவரது தலைமையிலான அமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய அரசுடன் இணைந்து மத்திய அரசு உறுதுணையுடன் செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Comments