Home Featured இந்தியா மகாதீர் போல் தோற்றமளிக்கும் இவர் யார்? – செய்தி உள்ளே!

மகாதீர் போல் தோற்றமளிக்கும் இவர் யார்? – செய்தி உள்ளே!

703
0
SHARE
Ad

pinarayi-vijayan-photo-12கோலாலம்பூர் – கேரளாவின் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்கவுள்ள பி.விஜயன், ஒரு சாயலில் கிட்டத்தட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் போல் இருக்கிறார் என்பது தான் தற்போது மலேசிய இணைவாசிகளிடையே பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் தகவல்.

அண்மையில் நடைபெற்ற கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 140 இடங்களில் இடதுசாரி முன்னணி 92 இடங்களைக் கைப்பற்றியது.

இதனையடுத்து, கேரளாவின் நடப்பு முதல்வர் உம்மன் சாண்டி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து பினராயி விஜயன் என்ற பி.விஜயன் (வயது 72) தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ளது.

time_mahathir1

(மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்)

இதனிடையே, பி.விஜயன் இவர் சாயலில் இருப்பதாக ஒப்பிடப்படும் மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் மொகமட்டின் தந்தை வழிப் பூர்வீகமும் கேரளா தான் என்பது கூடுதல் தகவல்.