Home இந்தியா கேரளா சட்டமன்றத் தேர்தல் : மீண்டும் பினராய் விஜயன் – 90 தொகுதிகளில் முன்னிலை

கேரளா சட்டமன்றத் தேர்தல் : மீண்டும் பினராய் விஜயன் – 90 தொகுதிகளில் முன்னிலை

634
0
SHARE
Ad

திருவனந்தபுரம் : இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) இந்திய நேரப்படி காலை 8.00 மணி முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.

சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற 5 மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் வரலாற்றுபூர்வ வெற்றியாக நடப்பு முதலமைச்சர் பினராய் விஜயன் (படம்) வெற்றி பெற்றிருக்கிறார்.

எப்போதுமே கேரளாவில் மாறி, மாறி கூட்டணிகளுக்கு ஆட்சி வாய்ப்பை வாக்காளர்கள் தருவது வழக்கம். இந்த மரபு பல ஆண்டுகளில் இப்போது முதன்முறையாக மாறியிருக்கிறது.

#TamilSchoolmychoice

மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 88-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கூட்டணி கட்சி முன்னணி வகித்து வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 47-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

பாஜக 4 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. கேரளாவில் அதிக ஆதரவுத்தளம் இல்லாத பாஜக 4 தொகுதிகளில் முன்னணி வகிப்பது முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.