Home இந்தியா தமிழ்நாடு தேர்தல் : திமுக: 128 – அதிமுக: 93 – மநீம: 1...

தமிழ்நாடு தேர்தல் : திமுக: 128 – அதிமுக: 93 – மநீம: 1 இடங்களில் முன்னிலை

525
0
SHARE
Ad

சென்னை :(மலேசிய நேரம் நண்பகல் 12:50 மணி நிலவரம்) வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் திமுக தொடர்ந்து 128 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக 93 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னனியில் உள்ளது.

#TamilSchoolmychoice

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் உள்ளார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார். போடிநாயக்கனூர் தொகுதியில் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வருகிறார்.

எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வரும் நிலையில், மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜூ பின்னடைவை சந்தித்துள்ளார். தாராபுரத்தில் எல்.முருகன் முன்னிலையில் உள்ளார்.