Home இந்தியா தமிழ்நாடு: குஷ்பு, ஸ்ரீபிரியா பின்னடைவு!

தமிழ்நாடு: குஷ்பு, ஸ்ரீபிரியா பின்னடைவு!

646
0
SHARE
Ad

சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது.

இங்கு பாஜகவை பிரதிநிதித்து குஷ்பு போட்டியிடுகிறார். இதே போல மயிலாப்பூரில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஸ்ரீபிரியாவும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி திமுக 128 தொகுதிகளிலும், அதிமுக 93 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. மநீம ஒரு தொகுதியில் முன்னணியில் உள்ளது.