Home இந்தியா மேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி சொந்தத் தொகுதியில் பின்னடைவு – திரிணாமுல் காங்கிரஸ் :...

மேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி சொந்தத் தொகுதியில் பின்னடைவு – திரிணாமுல் காங்கிரஸ் : 139 – பாஜக: 116 மற்றவை – 5

425
0
SHARE
Ad

கொல்கத்தா : இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) இந்திய நேரப்படி காலை 8.00 மணி முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி பெரிதும் எதிர்பார்க்கப்படும் மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள இதுவரையில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி திரிணாமுல் காங்கிரஸ் 139 தொகுதிகளிலும், பாஜக 116 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

அதிர்ச்சி தரும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காளத்தின் நடப்பு முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அவரது சொந்த நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.