Home Featured கலையுலகம் “கபாலி” – மலாய் மொழி பேசி வரலாறு படைக்கப் போகும் முதல் தமிழ்ப் படம்!

“கபாலி” – மலாய் மொழி பேசி வரலாறு படைக்கப் போகும் முதல் தமிழ்ப் படம்!

787
0
SHARE
Ad

kabaliகோலாலம்பூர்- ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரப்போகும் கபாலி பல்வேறு சாதனைகளைப் புரியவிருக்கின்றது. ஏற்கனவே, அதன் முன்னோட்டம் மில்லியன் கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளது.

மலேசியாவைப் பொறுத்தவரை மலாய் மொழியில் முழுமையாக மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவிருக்கும் முதல் தமிழ்ப் படமும் கபாலிதான்.

இதனைத் தொடர்ந்து, கபாலியின் மலாய் மொழியாக்கப் படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தால், அதன் காரணமாக, எதிர்காலத்தில் பல தமிழ்ப் படங்கள் மொழியாக்கம் செய்யப்படுவதற்கான வணிக வாய்ப்பையும், கபாலி உருவாக்கித் தரவிருக்கின்றது.

#TamilSchoolmychoice

இதனால், மலேசியா என்று வரும்போது, தமிழ்ப் படங்களுக்கான விற்பனை விலையும் பன்மடங்கு அதிகரிக்கும் நிலைமை ஏற்படும்.

ஏற்கனவே, இந்தோனேசியாவிலும் கபாலி பல திரையரங்குகளில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கும் தமிழ்ப்படங்களுக்கான சந்தையை கபாலி திறந்து வைக்கக்கூடும்.

கபாலி படத்தின் மலாய் மொழி முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கபாலி படத்தை மலேசியாவில் வெளியிடவிருக்கும் மாலிக் ஸ்ட்ரீம் கொர்ப்பரேஷன் நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் கபாலி படத்தின் மலாய் மொழி முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

ரஜினிகாந்த் (டப்பிங்) குரலில் மலாய் மொழி பேசும் அந்த முன்னோட்டத்தைக் காணவேண்டுமா?

கீழ்க்காணும் மாலிக் ஸ்ட்ரீம் கொர்ப்பரேஷன் நிறுவனத்தின் முகநூல் இணைப்பில் மலாய் மொழி பேசும் கபாலியைக் காணலாம்.

https://www.facebook.com/malikstreams/?fref=ts