Home Featured தமிழ் நாடு நாளை தமிழக சட்டமன்றப் பேரவை கூடுகின்றது!

நாளை தமிழக சட்டமன்றப் பேரவை கூடுகின்றது!

668
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512 சென்னை – நாளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேற்று தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிவரும் ஜெயலலிதா, பதவிப் பிரமாணம் முடிவடைந்ததும் உடனடியாக தமிழகத் தலைமைச் செயலகம் நோக்கிப் புறப்பட்டார். அங்கு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதன்பின்னர் உடனடியாக தமிழக ஆளுநர் மாளிகைக்கு சென்றார் ஜெயலலிதா. அங்கு மேட்டூர் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக வென்றுள்ள செம்மலை தற்காலிக சட்டமன்றப் பேரவைத் தலைவராக (சபாநாயகர்) ஆளுநரால் ஜெயலலிதா முன்னிலையில் நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, நாளை சட்டமன்றப் பேரவை கூடுகின்றது. நாளை தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள் தற்காலிக அவைத் தலைவர் செம்மலை முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வர்.

அதன் பின்னர்தான் சட்டமன்ற பேரவையில் அதிகாரபூர்வ அவைத் தலைவராக யார் செயல்படுவார் என்பது தெரியவரும்.