Home இந்தியா தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி செய்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது-மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி செய்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது-மு.க.ஸ்டாலின் பேச்சு

908
0
SHARE
Ad

stalinகவுந்தப்பாடி, மார்ச். 18- ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நேற்று இரவு தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் முத்துசாமி, முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பவானி ஒன்றிய செயலாளர் நல்லசிவம் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“ஈரோடு மாவட்டத்துக்கு தி.மு.க. தலைமை கழகம் ரூ.2 கோடி தேர்தல் நிதி அறிவித்து உள்ளது. ஆனால் அதைவிட சற்று அதிகமாகவே முதன் தவணையாக கொடுத்திருக்கிறார்கள். தி.மு.க. இப்போது ஆட்சியில் இல்லை. இருந்தும் மக்கள் நிதியை அளித்துள்ளார்கள். ஏனென்றால் பாராளுமன்ற தேர்தலில் நம்மை வெற்றி பெறச் செய்யத்தான் இந்த நிதியை அளித்துள்ளார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.”

“உலகத் தமிழர்களுக்கு குரல் கொடுத்து வரும் ஒரே தலைவர் கருணாநிதிதான். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கெல்லாம் தலைவரும் கருணாநிதி தான். கடந்த அவரது ஆட்சி காலத்தில் எத்தனையோ சாதனைகள். அதையெல்லாம் இங்கே பட்டியலிட்டால் நேரம் போதாது. 5-வது முறையாக முதல்வராக இருந்த கருணாநிதி செய்த சாதனையை எவரும் இனி செய்ய முடியாது.

“ஆனால் இந்த ஆட்சி காலத்தில் இதுவரை 6 முறை அமைச்சர்கள் மாற்றம் 31 முறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம், 36 முறை போலீஸ் அதிகாரிகள் மாற்றம். அடுத்த மாற்றம் எப்போது வருமோ, என நடுக்கத்துடன் இவர்கள் உள்ளனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 2 மணி நேரம் மின்வெட்டு இருந்தது.’

“இதை நாங்கள் மறுக்கவில்லை. அறிவிப்புடன் அதை செயல்படுத்தினோம். ஆனால் இப்போது 10 மணி நேரம் 18 மணி நேரம் என மின்வெட்டு நிலவுகிறது. ஆனால் எந்த அறிவிப்பும் கிடையாது. இதுதான் இந்த ஆட்சியின் பெரிய சாதனை”

“மின்வெட்டை குறைக்க திட்டங்களை செயல்படுத்த தி.மு.க. ஆட்சி நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால் இப்போதைய முதல்வர் ஜெயலலிதா அந்த திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டதால்தான் இந்த மின்வெட்டு தொடர்ந்து நீடிக்கிறது”

–  இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.