Home Featured இந்தியா அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 65-ஆக மாற்றம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 65-ஆக மாற்றம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

625
0
SHARE
Ad

modiசஹாரான்பூர் – பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு நேற்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. இதை முன்னிட்டு  உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரான்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினர்.

அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆகவும் சில மாநிலங்களில் 62 ஆகவும்  உள்ளது.

நாட்டில் போதிய மருத்துவ கல்லூரிகள் இருந்தால், நமக்கு மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. இரண்டு ஆண்டுகளில் நமக்கு தேவைப்படும் மருத்துவர்களை பெறுவது கடினம்.

#TamilSchoolmychoice

இதற்காக ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதிக்காக காத்திருக்க முடியாது. இதை  மனதில் கொண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை செய்கிறேன்.

மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது  60 லிருந்து 65-ஆக உயர்த்தப்படும். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இந்த வாரம் அளிக்கும்.

கிராமப்புற கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு மாதத்தின் 9-ஆம் நாள் கட்டணமில்லா இலவச சிகிச்சை  அளிக்க முன்வர வேண்டும் என மருத்துவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என பிரதமர் மோடி பேசினார்.