Home Featured நாடு மேலும் 2 புதிய பாகங்கள் கண்டுபிடிப்பு – எம்எச்370 தேடுதல் பணியில் முன்னேற்றம்!

மேலும் 2 புதிய பாகங்கள் கண்டுபிடிப்பு – எம்எச்370 தேடுதல் பணியில் முன்னேற்றம்!

525
0
SHARE
Ad

MH370 - Mozambiqueகோலாலம்பூர் – அண்மையில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள இரண்டு புதிய விமானப் பாகங்கள், எம்எச்370 விமானத்தைதைக் கண்டறிய மிகவும் உதவியாக இருக்கும் என விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.

இது குறித்து மலேசியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் கூறுகையில், “விமானத்திற்கு என்ன ஆனது என்பதை அறிய இன்னும் நமக்கு அதிகமான தகவல்கள் தேவைப்படுகின்றது. விமானம் ஏன் (ரேடார்) தொடர்பில் இருந்து விலகியது என்பது நமக்குத் தெரிய வேண்டும்” என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மொரீசியஸ், மொசாம்பிக் தீவுகளின் கடலோரப் பகுதிகளில் இந்த புதிய பாகங்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

அந்தப் பாகங்களில் ஒன்று மிகப் பெரியது என்றும், 80 செமீ நீளமும், 40 செமீ அகலமும் கொண்டிருப்பதாக அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது அப்பாகங்கள் சோதனைக்காக ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.