Home Featured கலையுலகம் “இது நம்ம ஆளு” – மலேசியாவில் வெளியாவதில் தடை இல்லை!

“இது நம்ம ஆளு” – மலேசியாவில் வெளியாவதில் தடை இல்லை!

598
0
SHARE
Ad

Idhu-Namma-Aalu-Movie-Photosகோலாலம்பூர் – சிம்பு-நயன்தாரா நடிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகவிருந்த ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், அத்திரைப்படத்தை மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் வீடு புரொடக்சன்ஸ் நிர்வாக இயக்குநர் டெனிஸ் குமாரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, அத்திரைப்படம் மலேசியாவில் வெளியிட எந்தத் தடையும் இல்லை என்றும், நாடெங்கிலும் இன்று அறிவிக்கப்பட்ட நேரப்படி படம் வெளியாகும் என்று செல்லியலுக்குத் தகவல் அளித்துள்ளார்.