Home Featured நாடு இன்றைய மஇகா சிறப்பு மாநாட்டில் பழனிவேல் தரப்பினர் அழைப்பின்றி கலந்து கொள்ளப் போகிறார்களா?

இன்றைய மஇகா சிறப்பு மாநாட்டில் பழனிவேல் தரப்பினர் அழைப்பின்றி கலந்து கொள்ளப் போகிறார்களா?

574
0
SHARE
Ad

MIC Logo 440 x 215சுபாங் ஜெயா – இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் மஇகா சிறப்பு பொதுப் பேரவையில் கலந்து கொள்ளுமாறு, பழனிவேல் தரப்பினர் தங்களின் ஆதரவாளர்களுக்கு குறுஞ்செய்திகள் மூலமாக அழைப்பு விடுத்து வருவதால், அவர்களும் இன்றைய மாநாட்டில் கலந்து கொள்வார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 11.00 மணிக்கு சுபாங் ஜெயாவிலுள்ள ஒன் சிட்டி மண்டபத்தில் இந்த சிறப்பு மாநாடு தொடங்குகின்றது. மாநாட்டுக்கு முன்பாக, மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் மண்டப வளாகத்திலேயே நடைபெறுகின்றது.

பல்வேறு அம்சங்கள் குறித்த தீர்மானங்கள் இன்றைய சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், பழனிவேல் தரப்பினரின் தலைமைச் செயலாளராகச் செயல்பட்டு வரும் முன்னாள் மஇகா பத்து தொகுதித் தலைவர் ஏ.கே.இராமலிங்கம், தங்களின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுமென குறுஞ்செய்திகள் மூலம் அழைப்பு விடுத்திருக்கின்றார் என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து, இன்றைய மாநாடு பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.