Home Featured இந்தியா பிரதமர் மோடியின் தாயாருக்கு ‘நாரி ஜக்ரான் சம்மான்’ விருது!

பிரதமர் மோடியின் தாயாருக்கு ‘நாரி ஜக்ரான் சம்மான்’ விருது!

592
0
SHARE
Ad

modi-mothertலக்னோ – பிரதமர் மோடியின் தாயான ‘ஹீரா பென்னுக்கு’ உத்திரப் பிரதேசத்திலிருந்து வெளிவரும் இந்தி பத்திரிகை ஒன்று விருது வழங்கி கவுரவித்துள்ளது.

நாரி ஜக்ரான் என்ற அந்த பத்திரிகையே பிரதமர் மோடியின் தாயான ஹீரா பென்னுக்கு ‘நாரி ஜக்ரான் சம்மான் 2016’ விருதை வழங்கியுள்ளது.

பத்திரிகை ஆசிரியரான மீனா மற்றும் அசோக் சாரேசியா ஆகியோர் இந்த விருதை ஹீரா பென்னின் மூத்த மகனான சோம்பாய் தாமோதர் தாஸ் மோடியிடம் வழங்கினர்.

#TamilSchoolmychoice

விருதை பெற்ற பின் செய்தியதளர்களிடம் பேசிய சோம்பாய் வயது மூப்பு காரணமாக தனது தாயால் நீண்ட தூரம் பயணம் செய்து இந்த விருதை வாங்க வர இயலவில்லை என்றார்.

மகளிரின் பாதுகாப்புக்காக இந்த விருதை நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அர்ப்பணம் செய்வதாக தாமோதர் தாஸ் கூறினார்.