Home Featured நாடு மக்கள் பிரகடனத்திற்கு ‘தகவல்’ விற்பனை செய்த கணினி வல்லுநர் மீது விசாரணை!

மக்கள் பிரகடனத்திற்கு ‘தகவல்’ விற்பனை செய்த கணினி வல்லுநர் மீது விசாரணை!

573
0
SHARE
Ad

Tun Mahathirகோலாலம்பூர் -முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் மக்கள் பிரகடனத்தில் அதிகமான கையெழுத்துகள் கிடைக்க, தன்னிடம் இருந்த தகவல்களை விற்பனை செய்ததாகக் கூறி கொண்ட கணினி வல்லுநர் (computer programmer) ஒருவரிடம் காவல்துறை விசாரணை நடத்தவுள்ளது.

இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவரை அழைத்து விசாரணை நடத்தி முழுத் தகவல்களை வழங்குவோம் என தேசியக் காவல்படைத் துணைத்தலைவர் நோர் ரஷீத் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அசாருதீன் ஒத்மான் என்ற அந்நபர் என்ன மாதிரியான தகவல்களை விற்றார் என்பதை காவல்துறை கண்டறியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மக்கள் பிரகடனத்திற்கு ஆதரவாளர்களை அதிகரிக்க தன்னுடைய தகவல் தளத்தில் இருந்து 900,000 பெயர்களை விற்பனை செய்ததாகக் கடந்த வியாழக்கிழமை அசாருதீன் சத்தியப் பிரமாணம் ஒன்றை எடுத்தார்.

மேலும், கடந்த ஏப்ரல் 27-ம் தேதி, ரட்டு நாகா என்ற நபர், தனக்கு 5,000 ரிங்கிட் சன்மானம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் அசாருதீன் தெரிவித்துள்ளார்.

அவர் பயன்படுத்திய அந்தத் தகவல்கள், கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, அனைத்து அரசியல் கட்சிகளிடத்திலும் இருந்ததாகவும், அதில் பெயர், அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது.