Home Featured கலையுலகம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அரவிந்த்சாமி நடத்தும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அரவிந்த்சாமி நடத்தும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’

1086
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொடர் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’!  பிரபல பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் ‘கோன் பனேகா குரோர்பதி’ என்ற பெயரில் இந்தியில் நடத்திய நிகழ்ச்சி இந்திய அளவில் மிகப் பிரபலமாக உருவெத்து இலட்சக்கணக்கான இரசிகர்களைக் கவர்ந்தது.

அந்த நிகழ்ச்சியின் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவலை மூலமாகக் கொண்ட ஆங்கிலப்படமான ‘ஸ்லம்டோக் மில்லியனேர்’ வசூலில் சாதனை படைத்ததோடு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுத் தந்தது.

arvindsamy-star vijay tvஇதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி தமிழ் மொழியிலும் வெளிவந்து பிரபலமடைந்தது. நடிகர்கள் சரத்குமார், சூர்யா, பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் நடத்திய அந்த நிகழ்ச்சி இந்த ஆண்டும் தொடர்கின்றது.

#TamilSchoolmychoice

இன்று ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் முதல் நிகழ்ச்சி தொடங்குகின்றது. இந்த முறை தொகுப்பாளராக நிகழ்ச்சியை நடத்துபவர் நடிகர் அரவிந்த்சாமி. ‘தனிஒருவன்’ படத்தின் மூலம் அவரது மறுபிரவேசம் தமிழ் சினிமாவில் மீண்டும் கவனிக்கத்தக்க ஓரிடத்தை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றது.

இதன் காரணமாக, ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ இரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசியாவில் ஆஸ்ட்ரோவின் ஸ்டார் விஜய்- 224 – அலைவரிசையில் இந்த நிகழ்ச்சி நாள்தோறும் இரவு 9.00 மணிக்கு ஒளியேறுகின்றது.