Home Featured நாடு சுங்கை பெசார் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளருக்கு ஆதரவாக சுப்ரா பிரச்சாரம்!

சுங்கை பெசார் இடைத்தேர்தல்: தேமு வேட்பாளருக்கு ஆதரவாக சுப்ரா பிரச்சாரம்!

687
0
SHARE
Ad

Subraசுங்கை பெசார் – வரும் ஜூன் 18-ம் தேதி நடைபெறவுள்ள சுங்கை பெசார் இடைத்தேர்தலில், தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புடிமான் மொகமட் சோடிக்கு ஆதரவாக நேற்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவருடன் டத்தோ ஆர்.எஸ் மணியம் உள்ளிட்ட மஇகா-வின் முக்கியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Subra1கடந்த 2013-ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில், சுங்கை பஞ்சாங் சட்டமன்றத் தொகுதியில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் மொகமட் பட்சின் தாஸ்லிமினை விட 2,183 வாக்குகள் வித்தியாசத்தில் புடிமான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice