பிரதமர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, அவரது வெளிநாட்டு சுற்றுப் பயணம், அவர் நிகழ்த்தும் உரை ஆகியவையும் இதில் இடம் பெறுகின்றன. இது வரை, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும், இந்த இணையத்தளத்தில் தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
இதனால், மற்ற இந்திய மொழிகள் மட்டுமே தெரிந்தவர்கள், இதை பயன்படுத்துவதில் கஷ்டம் இருந்து வந்தது. இதையடுத்து, பெங்காலி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய, மேலும் ஆறு மொழிகளில், இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ், இதை, நேற்று துவக்கி வைத்தார். இதையடுத்து, பிரதமர் அலுவலக இணையத்தளத்தில் பதிவிடப்படும் தகவல்களை இனி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் படிக்க முடியும்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ”மேலும் ஆறு மொழிகளில் இணையத்தளத்தை பயன்படுத்த முடிவதால், ஏராளமானவர்களை இணைக்க முடியும்; என்னால் மேலும் பலருடன் தொடர்பு கொள்ள முடியும்,” என்றார்.