இது நம்ம ஆளு படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இது நம்ம ஆளு படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக டி.ராஜேந்தர் காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் ”எங்கள் நிறுவனம் பலகோடி ரூபாய் செலவு செய்து ‘இது நம்ம ஆளு’ படத்தை தயாரித்தது.
தயவு செய்து இதனைத் தடுத்து நிறுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனைத் தடுத்து நிறுத்தாவிடில் எனக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்” என்று கூறியிருக்கிறார்.
இப்படத்தை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்ட டி.ராஜேந்தர், படம் வெளியான இணையதளங்களின் பட்டியலையும் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்திருக்கிறார்.