Home Featured நாடு சிலாங்கூர் அரசுக்கு எதிராக எம்ஏசிசி-ல் புகார் அளித்தார் ரபிசி!

சிலாங்கூர் அரசுக்கு எதிராக எம்ஏசிசி-ல் புகார் அளித்தார் ரபிசி!

731
0
SHARE
Ad

Rafiziபுத்ராஜெயா – சிலாங்கூர் அரசாங்கத்தில் நடக்கும் ஊழல் விவகாரங்கள் குறித்து பிகேஆர் உதவித் தலைவரும், பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி இன்று மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் அளித்தார்.

புத்ராஜெயாவிலுள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை, கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென், காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் அப்துல்லா உள்ளிட்ட சுமார் 50 ஆதரவாளர்களுடன் சென்ற ரபிசி தனது புகார் மனுவை அளித்தார்.

சிலாங்கூர் அரசாங்கத்திற்கு எதிரான தனது புகாரை அளித்துவிட்டதாகவும், அப்புகாரின் அடிப்படையில் எம்ஏசிசி விசாரணை நடத்தும் எனத் தான் நம்புவதாகவும் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரபிசி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice