Home Featured கலையுலகம் நச்சு கலந்த மதுவால்தான் கலாபவன் மணி உயிரிழந்துள்ளார் – ஆய்வில் நிரூபணம்!

நச்சு கலந்த மதுவால்தான் கலாபவன் மணி உயிரிழந்துள்ளார் – ஆய்வில் நிரூபணம்!

758
0
SHARE
Ad

Kalabavan-Mani-Facebook1திருவனந்தபுரம் – நடிகர் கலாபவன்மணி கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி கேரளாவில் மர்மமான முறையில் இறந்தார். இது தெடர்பாக கேரள சாலக்குடி போலீசார்   வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கலாபவன்மணியின் கல்லீரல் உட்பட முக்கிய உடல்  உறுப்புகள் ஐதராபாத்தில் உள்ள பரிசோதனை  கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கிருந்து அளிக்கப்பட்ட அறிக்கை நேற்று வெளியானது. அதில், கலாபவன்  மணியின் உடலில் மெத்தனால் கலந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஆனால்  அதுதான் மரணத்திற்கு காரணம்  என்று  கூற முடியாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை  கேரள  போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.