Home Featured கலையுலகம் உண்மை தெரிய வேண்டும் – உள்துறை அமைச்சருக்கு கலாபவன் மணி மனைவி கடிதம்!

உண்மை தெரிய வேண்டும் – உள்துறை அமைச்சருக்கு கலாபவன் மணி மனைவி கடிதம்!

994
0
SHARE
Ad

kalabhavan-maniகொச்சின் – பிரபல தமிழ், மலையாள நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் இறந்தார். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது கலாபவன் மணியின் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர்.

இது தொடர்பாக கலாபவன் மணியின் மனைவி நிம்மி, கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தனது கணவர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

அந்தக் கடிதம் கேரள காவல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டது.

இது குறித்து கேரள காவல் அதிகாரி சென்குமார் கூறும்போது, “காவல்துறை அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடாது. அறிவியல் ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.