Home Featured தமிழ் நாடு 234 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டி – ஜெயலலிதா அறிவிப்பு!

234 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டி – ஜெயலலிதா அறிவிப்பு!

644
0
SHARE
Ad

New-CM_Jaya7(C)சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்தே போட்டியிடும் என்று முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மே 16-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பணிகளில் கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

திமுக, பாமக, பாரதிய ஜனதா, மக்கள் நல கூட்டணி ஆகிய கட்சிகள் தங்களின் நிலைகளை ஓரளவு தெளிவுபடுத்தி விட்டன. ஆனால், அதிமுக தனித்து போட்டியிடுகிறதா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா? என்கிற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

#TamilSchoolmychoice

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் அனைத்துமே இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், இதற்கு சில கட்சிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை.

குறிப்பாக ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இதனால்தான் இழுபறி நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரை ஜெயலலிதா போயஸ்கார்டனுக்கு அழைத்து கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த கட்சிக்கும் எத்தனை இடங்கள் என்ற தகவலும் இல்லை. சமத்துவ மக்கள் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட ஒரு சீட் மட்டுமே கொடுத்து விட்டு, அதில் வேறு யாரையாவது நிற்க வைத்து விட்டு, 234 தொகுதியிலும் பிரச்சாரத்துக்காக சரத்குமாரை பயன்படுத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.