Home Featured கலையுலகம் கலாபவன் மணி மரணத்தில் திருப்பம்: அவரது மாமனார் பூச்சி மருந்து வாங்கியதாக தகவல்!

கலாபவன் மணி மரணத்தில் திருப்பம்: அவரது மாமனார் பூச்சி மருந்து வாங்கியதாக தகவல்!

762
0
SHARE
Ad

kalabhavan-mani-19திருவனந்தபுரம் – நடிகர் கலாபவன் மணி கடந்த 6–ஆம் தேதி மரணம் அடைந்தார். பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மதுகுடித்தபோது மயங்கி விழுந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். கலாபவன் மணி உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் அருந்திய மதுவில் அளவுக்கு அதிகமாக மெத்தனால் ஆல்கஹால் இருந்ததாக தெரிவித்தனர்.

அரசு அனுமதி பெற்று விற்கப்படும் மதுவில் இவ்வளவு அதிக அளவில் மெத்தனால் ஆல்கஹால் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்கள். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கலாபவன் மணியின் வயிற்றுப்பகுதி ரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த ஆய்வில் அவரது உடலில் பூச்சி மருந்து கலந்து இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. மதுவில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கலாபவன் மணி மரணம் அடைவதற்கு முன்தினம் அவருடன் மலையாள நடிகர்கள் சாபு, ஜாபர் இடுக்கி ஆகியோர் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். ‘‘கலாபவன் மணி மது அருந்தியபோது நான் அங்கிருந்து சென்று விட்டேன்’’ என்று சாபு வாக்குமூலம் அளித்தார்.

ஜாபர் இடுக்கி, ‘‘நாங்கள் எல்லோரும் சேர்ந்து மது அருந்தினோம்’’ என்று கூறினார். நடிகர் சாபுவுக்கும், கலாபவன் மணிக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக இணையத்தளங்களில் தகவல் பரவியது. இதனை சாபு மறுத்துள்ளார்.

‘‘கலாபவன்மணி மரணத்தில் தேவையில்லாமல் என்னை சம்பந்தப்படுத்துகிறார்கள். அவருடன் நான் மது அருந்தவில்லை’’ என்று கூறினார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தற்போது அருண், விபின், முருகன் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

இவர்கள் கலாபவன் மணி வீட்டில் வேலை பார்த்தவர்கள். கலாபவன் மணி மருத்துவமனையில் இறந்ததும் இவர்கள் 3 பேரும் அவசரமாக பண்ணை வீட்டுக்கு திரும்பி வீட்டை சுத்தப்படுத்தி உள்ளனர்.

மதுபாட்டில்களை அப்புறப்படுத்தி உள்ளார்கள். கலாபவன் மணி வாந்தி எடுத்ததையும் கழுவி சுத்தப்படுத்தி உள்ளனர். தடயங்களை இவர்கள் 3 பேரும் அழித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. 3 பேரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. மேலும் போலீசார்  சம்பவம் நடைபெற்றதாக கூறபட்ட பண்ணை வீட்டை சோதனை செய்தனர் அந்த வீட்டில் இருந்து பூச்சி கொல்லை மருந்து பாட்டிலை கைபற்றினர்.

இந்த நிலையில் போலீசார் விசாரணையில் புதிய திருப்பமாக கலாபவன் மணியின் உடலில் கலந்து இருந்ததாக கூறப்படும் பூச்சி கொல்லி மருந்தை அவரது மாமனார் கடையில் வாங்கியதாக  கடைக்காரர் தெரிவித்துள்ளார்.